Tuesday 8 May 2012

முகமூடி மனிதர்கள்

புன்னகை இனிப்பில் பூசப்பட்ட முகங்களுக்குபின்
உவர்ப்பும் துவர்ப்பும் புளிப்பும் கசப்புமாய் 
எத்தனை சுவைகள்...
இதில் இயல்பிலேயே இனிப்பும் உண்டு
கண்டுபிடிப்பது தான் கஷ்டம்...
இனிப்புப் பூச்சு
உமிழ் நீரில் கரைந்த பின் தான் தெரிகிறது
உண்மைச்சுவை... - இப்படி 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்தும் 
உடனே கரைந்துபோகும் உண்மைகளின் சாயலில்
இனிப்பை தேடி ஓடி
ஏதேதோ சுவைப்பதிலயே கழிகிறது காலம்!

1 comment:

  1. மொத்தத்தில், சிரிப்பவர்கள் எல்லாம் சாயம் பூசப்பட்ட குண்டு மிட்டாய்! சாயம் கரைந்த பின் தான் உண்மை நிறம் தெரியும்!!!

    ReplyDelete